Print this page

ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கைச்சாத்து 

தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள் பிள்ளைகளின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (07) பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலில் கையெழுத்திட்டார். 

பின்னர் ஏனைய கட்சி தலைவர்கள் எம்பிக்கள் கைச்சாதிட்டனர்.